அமெரிக்காவில் பத்து நாட்களில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தகவல்

அமெரிக்காவில் பத்து நாட்களில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தகவல்
அமெரிக்காவில் 10 நாட்களில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா முழுவதும் கடந்த 14-ம் தேதி முதல் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதேபோல் கடந்த 18-ம் தேதி முதல் மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரபட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 14-ம் தேதி தடுப்பூசி போடும் பணி தொடங்கிய நிலையில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பின் இயக்குனர் ராபர்ட் ரெட்பெல்ட் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் 10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுமென அவர் கூறினார்.
Comments