வடசென்னையில் போலி ஆவணங்கள் மூலம் 26 கோடி ரூபாய் ஜிஎஸ்டி மோசடி தனியார் நிறுவன இயக்குநர் கைது

வடசென்னையில் போலி ஆவணங்கள் மூலம் 26 கோடி ரூபாய் ஜிஎஸ்டி மோசடி தனியார் நிறுவன இயக்குநர் கைது
வடசென்னையில் போலி ஆவணங்கள் மூலம் 26 கோடி ரூபாய் ஜிஎஸ்டி மோசடி செய்த தனியார் நிறுவன இயக்குநரை ஜிஎஸ்டி புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மெட்டல் ஸ்கிராப் வியாபாரம் செய்யும் நிறுவனத்தின் இயக்குனரை கைது செய்துள்ளதாக ஜிஎஸ்டி வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சரக்கு எதுவும் கைமாறாமலேயே, 150 கோடி ரூபாய் அளவுக்கு, போலியான வரிச் சான்றிதழ்களை, பொய்யான சில நிறுவனங்களின் பெயரில் பெற்றதாகவும், இதன் மூலம் ஜிஎஸ்டி கிரடிட் ஆக 26 கோடி ரூபாய் பெற முயற்சித்ததாகவும் கைது செய்யப்பட்ட நபர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி கிரடிட் மோசடி தொடர்பாக இந்த மாதத்தில் இது 5ஆவது கைது நடவடிக்கை என சென்னை வடக்கு ஜிஎஸ்டி ஆணையர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
Comments