கொரோனா பரவலால் அண்ணாத்த படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தம் : நடிகர் ரஜினிகாந்த் நாளை மறுநாள் சென்னை திரும்புவுள்ளதாக தகவல்

கொரோனா பரவலால் அண்ணாத்த படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தம் : நடிகர் ரஜினிகாந்த் நாளை மறுநாள் சென்னை திரும்புவுள்ளதாக தகவல்
அண்ணாத்த படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் நாளை மறுநாள் சென்னை திரும்புவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
படப்பிடிப்பு தளத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்திற்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா நெகட்டிவ் என முடிவு வெளியானது.
இந்நிலையில் அவருக்கு மேலும் ஒரு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பரிசோதனை முடிவினைப் பொறுத்து நாளை மறுநாள் நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்புவார் எனவும் கூறப்படுகிறது.
Comments