மதுரை அருகே சமணர்கள், வேடர்கள் வாழ்ந்த புத்தூர் மலைக் குகையைத் தொல்லியல் துறையினர் பாதுகாக்கக் கோரிக்கை

0 1390
மதுரை அருகே சமணர்கள், வேடர்கள் வாழ்ந்த புத்தூர் மலைக் குகையைத் தொல்லியல் துறையினர் பாதுகாக்கக் கோரிக்கை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சமணர்கள் வாழ்ந்த குகையைத் தொல்லியல் துறையினர் பாதுகாக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

உசிலம்பட்டி அருகே உள்ள புத்தூர் மலையில் 2ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் சமணர்கள் வாழ்ந்த குகை 1996ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.

இந்தக் குகையில் சமணர்களும் வேடர்களும் வாழ்ந்ததற்கான அடையாளங்களாகப் பாறை ஓவியங்களும் தமிழ்க் கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன.

பாகுபலி, மூன்று தீர்த்தங்கரர்கள் ஆகியோரின் சிற்பமும் காணப்படுகிறது. தொல்லியல் சிறப்பு மிக்க இந்த இடத்தைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும், சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments