தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
அடுத்த 4 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும், வரும் 28ஆம் தேதி தென் கடலோர மாவட்டங்களில் இடியுடன்கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 4 சென்டிமீட்டர் மழையும், வால்பாறையில் 3 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது.
வங்கக்கடல் பகுதிகளைப் பொறுத்தவரையில் மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை.
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், இன்றும் நாளையும் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments