வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை-சுகாதாரத்துறை செயலாளர்

0 3699
வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், உருமாறியுள்ள வைரஸ், புது வகை கொரோனா அல்ல ஆகவே பொதுமக்கள் பயப்பட வேண்டாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார்.

மாநிலம் முழுவதும் விமான நிலையங்களில் ஆய்வு நடத்தி, 37 நபர்களை பரிசோதனை செய்ததில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவருடன் தொடர்பில் இருந்த 15 பேருக்கு பரிசோதனைகள் எடுக்கப்பட்டு, முடிவுகள் இன்று மாலை வெளியாகும் என்றும் ராதாகிருஷ்ணன் கூறினார்.

இங்கிலாந்து மற்றும் அவ்வழியாக வந்த இரண்டாயிரத்து,724 பேரை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், தமிழகத்தில் தொடர்ந்து அதிக அளவில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும், கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தர மறுத்தால், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுக்கும் பிரிவின் கீழ் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments