கிறிஸ்துமஸ் திருநாள்.. தலைவர்கள் வாழ்த்து..!

0 576
கிறிஸ்துமஸ் திருநாளையொட்டித் தமிழக ஆளுநர், முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் கிறித்துவப் பெருமக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

கிறிஸ்துமஸ் திருநாளையொட்டித் தமிழக ஆளுநர், முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் கிறித்துவப் பெருமக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித் விடுத்துள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் நலமான, மகிழ்ச்சியான, நிறைவான வாழ்க்கையை நடத்த வழிகாட்டும் நட்சத்திரங்களாக இரக்கம், மன்னிப்பு, அன்பு, பரிவு ஆகியவற்றைத் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள செய்தியில், இயேசு பிரான் போதித்த அன்பு, தியாகம், இரக்கம், பொறுமை, எளிமை, ஈகை ஆகிய உயரிய நெறிகளை மக்கள் தங்கள் வாழ்வில் பின்பற்றி வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாய் சகோதரத்துவத்துடன் வாழ்ந்தால் உலகம் அமைதிப் பூங்காவாகப் பூத்துக் குலுங்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ஏழை எளிய மக்களுக்குக் கருணையுள்ளத்துடன் உதவிடும் ஒரு உன்னதத் திருவிழா எனக் குறிப்பிட்டுள்ளார். ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமத்துவக் கொள்கை கிறிஸ்துமஸ் நாளில் எங்கும் மிளிர்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments