தந்தை பெரியாரின் 47வது நினைவுநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

0 1571
தந்தை பெரியாரின் 47ஆவது நினைவுநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தந்தை பெரியாரின் 47ஆவது நினைவுநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி , விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் பெரியார் சிலைக்கு மாலை அணித்து மரியாதை செலுத்தினர்.

சுருண்டு கிடந்த தமிழினத்துக்கு சுயமரியாதை ஊட்டிய பகுத்தறிவுச் சூரியன் தந்தை பெரியாரின் 47-ஆவது நினைவு நாள் என ஃபேஸ்புக்கில் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

சமூக அடிமைத்தனம் தொடரும் வரை, ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் வரை, பெண்ணடிமைத்தனம் மறையாதவரை பெரியார் நித்தமும் நினைவு கூரப்படுவார்! அவர் ஏற்றிய சுடரை அணையாமல் காப்போம்! என அப்பதிவில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments