கர்நாடக உள்துறை செயலர் ரூபா பெயரில் போலி பேஸ்புக் கணக்கு மூலம் மோசடியில் ஈடுபட்ட மர்மநபர்

0 931

போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி, கர்நாடக உள்துறை செயலர் ரூபா புகைப்படங்களை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நடந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தியவரும், தற்போது கர்நாடக உள்துறை செயலாளராகவும் இருப்பவர் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா. அவரது  புகைப்படங்களுடன் தொடங்கப்பட்ட ஃபேஸ்புக் கணக்கை, அவர்தான் தொடங்கி இருக்கிறார் என்று நினைத்து, பலர் நட்பு பட்டியலில் இணைந்துள்ளனர்.

அவர்களின் செல்போன் எண்களை ஆன்லைனில் பெற்ற மர்மநபர், தொண்டு நிறுவனத்திற்கு பணம் அனுப்ப கூறியுள்ளார். இதனை நம்பிய பலரும் மர்மநபர் குறிப்பிட்ட வங்கி கணக்குக்கு பணத்தை அனுப்பி வைத்துள்ளனர்.

அசாம் மாநிலத்தை சேர்ந்த சிலர், சந்தேகமடைந்து அதிகாரி ரூபாவை தொடர்பு கொண்டு விசாரித்த போது தான், அவருக்கு உண்மை தெரியவந்துள்ளது. புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீஸார்  விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments