திருநள்ளாற்றில் கொரோனா தடுப்பு விதிகளுடன் சனிப்பெயர்ச்சி விழாவை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி

0 1967
திருநள்ளாற்றில் சனிப்பெயர்ச்சி விழாவை கொரோனா தடுப்பு விதிகளை முழுமையாகப் பின்பற்றி நடத்தச் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

திருநள்ளாற்றில் சனிப்பெயர்ச்சி விழாவை கொரோனா தடுப்பு விதிகளை முழுமையாகப் பின்பற்றி நடத்தச் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

அங்கு டிசம்பர் 27 முதல் பிப்ரவரி 12 வரை  சனிப்பெயர்ச்சி விழா நடத்தக் முடிவெடுக்கப்பட்டது. ஆனால் விழாவில் பக்தர்களை அனுமதிப்பதற்குத் தடை கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த பதில் மனுவில், சனிப்பெயர்ச்சி நாளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பக்தர்களை அனுமதிப்பதாகவும், பிற நாட்களில் பக்தர்களுக்கு நீண்ட வரிசை அமைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

விழா நடத்துவது தொடர்பாகக் கூடி முடிவெடுக்கவும், அனைவரும் ஒப்புக்கொண்டால் கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றி விழாவை நடத்திக் கொள்ளலாம் எனத் தீர்ப்பளித்த நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments