ஆதரவாளர்கள் தனிக்கட்சி தொடங்க வலியுறுத்தினால் நிச்சயம் தொடங்குவேன் - மு.க.அழகிரி

தனிக்கட்சி தொடங்குவதா என்பது உள்ளிட்ட தேர்தல் நிலைப்பாடு குறித்து 3ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ள மு.க.அழகிரி, நடிகர் ரஜினியை விரைவில் கண்டிப்பாக சந்தித்து பேச உள்ளதாகவும் கூறியுள்ளார்.
சென்னை கோபாலபுரத்தில் தன்னுடைய தாயார் தயாளு அம்மாவின் உடல்நலம் குறித்து, மு.க.அழகிரியும் அவருடைய மனைவி காந்தி அழகிரியும் நேரில் சந்தித்து விசாரித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி, திமுகவில் மறுபடியும் சேரும்படி தனக்கு எந்த அழைப்பும் இல்லை,
திமுகவுடன் இணைந்து தேர்தல் பணி செய்ய வாய்ப்பும் இல்லை என்று பதிலளித்தார்.
Comments