ரூ.2500 உடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது கூட்டுறவுத்துறை

0 5723
பொங்கல் பரிசுத் தொகுப்பும் இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாயும் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களைக் கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பும் இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாயும் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களைக் கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைகளுக்குப் பொங்கல் பரிசு வழங்கும்போது முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், பெண்களுக்குத் தனி வரிசை அமைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாய விலைக்கடைகளில் கூடுதலாக ஒரு பணியாளரை நியமிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

ஒரு நாளில் காலையில் நூறு பேருக்கும் பிற்பகலில் நூறு பேருக்கும் என 200 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் பரிசுத்தொகையை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments