29 டாலருக்கு சாப்பிட்டுவிட்டு 2,020 டாலரை டிப்சாக வழங்கிய வாடிக்கையாளர்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள உணவு விடுதி ஒன்றில் 29 டாலருக்கு சாப்பிட்ட வாடிக்கையாளர் ஒருவர் அதற்கு டிப்சாக 2ஆயிரத்து 20 டாலரை வழங்கியுள்ளார்.
இதுதொடர்பாக உணவு விடுதியின் மேலாளர் தனது முகநூலில் இந்த டிப்சை விடுதியில் உள்ள அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கும்படியும் அந்த வாடிக்கையாளர் கேட்டுக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி ஒவ்வொரு ஊழியருக்கும் தலா 80டாலர் அன்பளிப்பு வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டில் கொரோனாவுக்கு மத்தியிலும் சிறப்பாக சேவை செய்த ஊழியர்களை பாராட்டும் வகையில் இந்த டிப்சை அவர் வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Comments