சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் குளத்தின் சுற்றுச் சுவர் சீரமைத்து தரப்படும்-முதலமைச்சர் அறிவிப்பு

0 626
சிதம்பரம் மற்றும் நாகூரில் அண்மையில் கனமழை, வெள்ளத்தால் சேதமடைந்த கோவில் மற்றும் தர்கா குளங்களின் தடுப்புச் சுவர் சீரமைத்து தரப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

சிதம்பரம் மற்றும் நாகூரில் அண்மையில் கனமழை, வெள்ளத்தால் சேதமடைந்த கோவில் மற்றும் தர்கா குளங்களின் தடுப்புச் சுவர் சீரமைத்து தரப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டு அறிக்கையில், சிதம்பரத்தில் அண்மையில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக சேதமடைந்ததை இளமையாக்கினார் திருக்கோவில் குளத்தின் சுற்றுச் சுவர், ரூபாய் 2.62 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசால் சீரமைத்து தரப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல, நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் தர்கா குளத்தின் நான்கு புறதடுப்புச் சுவரும், ரூபாய் 5.37 கோடி மதிப்பீட்டில் தமிழக அரசால் சீரமைத்து தரப்படும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

அண்மையில் கடலூர், நாகை மாவட்டங்களுக்கு ஆய்வு சென்றபோது பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments