வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி: இருவர் கைது

0 957

வெளிநாட்டில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை தரமணியைச் சேர்ந்த வள்ளி என்பவர் சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரில், தனது மகனுக்கு வெளிநாட்டு வேலை வேண்டி, தொலைக்காட்சி விளம்பரத்தில் வந்த தொலைபேசியைத் தொடர்பு கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் அவர்கள் கேட்டதற்கேற்ப 47 ஆயிரம் ரூபாய் அனுப்பியதாகவும், பின்னர் குறிப்பிட்ட நபர்களைத் தொடர்பு கொள்ளமுடியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் பகுதியைச் சேர்ந்த மணிமாறன் மற்றும் சிவானந்தம் ஆகியோரைக் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments