சென்னையில் சாலைகளில் பிச்சையெடுக்க வைக்கப்பட்ட 26 குழந்தைகள் மீட்பு

0 9814

சென்னையில் பிச்சையெடுக்க வைக்கப்பட்ட 26 குழந்தைகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

கடந்த ஒருவாரகாலமாக போலீசார் நடத்திய சோதனையில் பெற்றோராலும் உறவினர்களாலும் பிச்சை எடுக்க தினமும் 100 ரூபாய் வாடகைக்கு விடப்பட்டதாக கூறப்படுகிறது.

ஏழைக்குழந்தைகளை வைத்து நுங்கம்பாக்கம் மற்றும் நந்தனம் போன்ற சாலைகளின் சிக்னல்களில் நின்று பிச்சையெடுத்த எட்டுப் பெண்களும் போலீசாரிடம் சிக்கினர்.

குழந்தைகள் யாரும் கடத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னையில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் ஆறு குழந்தைகள் காணாமல் போயிருப்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments