வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் திரட்டிய 2 கோடி கையெழுத்துகளுடன் குடியரசுத் தலைவரை இன்று சந்திக்கிறார் ராகுல் காந்தி

மத்திய பாஜக அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் திரட்டிய இரண்டு கோடி கையெழுத்துகளுடன் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க காங்கிரஸ் எம்.பியான ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார்.
நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் கட்சி நடத்திய இயக்கத்தில் பெறப்பட்ட கையெழுத்துகளுடன் ராகுல் காந்தி இன்று காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளார்.
இதன் பின்னர் அவர் குடியரசுத் தலைவரை சந்திக்க உள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
Comments