இந்தியாவில் காற்று மாசுவால் ஒரே ஆண்டில் 17 லட்சம் பேர் உயிரிழப்பு- தி லான்செட் இதழ் அதிர்ச்சித் தகவல்

0 1076
இந்தியாவில் காற்று மாசுவால் ஒரே ஆண்டில் 17 லட்சம் பேர் உயிரிழப்பு- தி லான்செட் இதழ் அதிர்ச்சித் தகவல்

ந்தியாவில் காற்று மாசுவினால் கடந்த ஆண்டு மட்டும் 17 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து சர்வதேச சுற்றுச்சூழல் இதழான தி லான்செட் வெளியிட்டுள்ள கட்டுரையில், இந்தியாவில் ஏற்பட்டுள்ள காற்று மாசுவால் 40 விழுக்காடு மக்கள் நுரையீரல் நோய்களாலும், 60 விழுக்காடு மக்கள் இதய நோய், பக்கவாதம், நீரிழிவு உள்ளிட்ட நோய்களாலும் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டில் மட்டும் காற்று மாசு காரணமாக 17 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாகவும், இது மொத்த இறப்பில் 18 விழுக்காடு என்றும் தி லான்செட் கூறியுள்ளது. மேலும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒன்று புள்ளி 4 விழுக்காடு இழப்புக்கும் வழிவகுத்தது என்றும் அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments