விவசாயிகளுடன் பிரதமர் மோடி நாளை காணொலி வாயிலாக கலந்துரையாடல்

0 793
விவசாயிகளுடன் பிரதமர் மோடி நாளை காணொலி வாயிலாக கலந்துரையாடல்

பிரதமர் மோடி ஆறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன் காணொலி காட்சி வாயிலாக நாளை கலந்துரையாடுகிறார்.

வேளாண் சட்டங்களைக் குறித்த விவசாயிகளின் கருத்தை அறிவதுடன் விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை தமது அரசு செயல்படுத்தி வருவதையும் பிரதமர் எடுத்துரைப்பார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் 2000 ரூபாய் உதவித் தொகையை 9 கோடி விவசாயிகளுக்கு பிரதமர் வழங்க உள்ளார். அவர்களின் வங்கிக் கணக்கில் அந்தத் தொகை நேரடியாக செலுத்தப்படும்.

அரசுக்கு எதிராக விவசாயிகள் அணி திரண்டதைப் போல் எதிர்க்கட்சியினர் சித்தரிப்பதாக மத்திய அமைச்சர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பஞ்சாப்- ஹரியானா விவசாயிகள் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments