இந்தியா-ரஷ்யா இடையேயான வருடாந்திர உச்சி மாநாடு ரத்து- வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல்

0 724
இந்தியா-ரஷ்யா இடையேயான வருடாந்திர உச்சி மாநாடு ரத்து- வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல்

ந்தியா - ரஷ்யா இடையேயான வருடாந்திர உச்சி மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா - ரஷ்யா இடையேயான வருடாந்திர உச்சி மாநாடு நடைபெறவில்லை என்றார்.

இரு நாட்டு அரசுகளிடையே எடுக்கப்பட்ட ஒருமித்த முடிவு இதுவாகும் என்று குறிப்பிட்ட அவர், இந்த விவகராத்தில் ஏதேனும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டால் அது முற்றிலும் தவறானதாகும் என்றார். முக்கியமான உறவுகளில் தவறான தகவல்களை பரப்புவது பொறுப்பற்றது ஆகும் என்றும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments