கடும் குளிரிலும் 28-வது நாளாக நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்... 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என திட்டவட்டம்

கடும் குளிரிலும் 28-வது நாளாக நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்... 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என திட்டவட்டம்
வேளாண் சட்டங்களில் தேவையான திருத்தங்கள் செய்ய தயார் என்ற மத்திய அரசின் அறிவிப்பை விவசாயிகள் ஏற்க மறுத்துள்ளனர்.
3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி, டெல்லி எல்லைகளில் கடும் குளிரையும் பொருட்படுத்தால், விவசாயிகளின் போராட்டம் 28வது நாளாக நீடித்து வருகிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சா பிரதிநிதிகள், மத்திய அரசு எதிர்க்கட்சிகளைப் போல் தங்களை நடத்தக்கூடாது என்றனர்.
திறந்த மனதுடனும், கனிவான இதயத்துடனும் தங்களது கோரிக்கைகளை மத்திய அரசு செவிமடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஏற்கனவே நிராகரித்த தீர்வுகளை முன்வைத்து மத்திய அரசு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அணுக கூடாது என்றும் விவசாயிகள் கேட்டுக்கொண்டனர்.
Comments