வெளியான தாய்லாந்து மன்னருடைய காதலியின் அந்தரங்க புகைப்படங்கள் .. அதிர்ச்சியில் மன்னர்

0 5252

தாய்லாந்து மன்னருடைய காதலியின் அந்தரங்க புகைப்படங்கள் பிரிட்டன் பத்திரிக்கையாளருக்கு அனுப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்து மன்னரான மகா வஜிரலோங்க்கார்ன்( Maha Vajiralongkorn) சர்ச்சைக்கு பேர் போனவர். தாய்லாந்து மட்டுமல்லாது உலகமே கொரோனாவால் தத்தளித்த சமயத்தில் அந்தப்புர அழகிகளோடு ஜெர்மனிக்கு உல்லாச பயணம் சென்றார் வஜிரலோங்க்கார்ன். (Vajiralongkorn)

வஜிரலோங்க்கார்ன் (Vajiralongkorn) தனது அதிகாரப்பூர்வமாக காதலி என்னும் பதவியை சினீநாட் வோங்வாஜிரபக்தி (Sineenat Wongvajirapakdi) என்னும் தனது பாதுகாவலராக இருந்த பெண் ஒருவருக்கு கொடுத்தபோது, உலகமே அவரை ஒரு மாதிரியாக பார்த்தது.

இதனிடையே, கடந்த அக்டோபர் மாதம் ராணியான சுதிடாவின் இடத்தை சினீநாட்(Sineenat) கைப்பற்ற முயல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதன் பின்னர் சினீநாட் சிறையிலடைக்கப்பட்டார். எதிரி ஒழிந்தார் என நிம்மதியாக சுதிடாவின் பெருமூச்சு விடுவதற்குள், சினீநாட் எந்த குற்றமும் செய்யவில்லை என்று மன்னரின் அழகிப்படையில் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

இந்நிலையில்தான் சினீநாட்டின் 1,000க்கும் மேலான அந்தரங்க படங்கள் ஆண்ட்ரூ மேக்ரிகோர் மார்ஷல் என்னும் இங்கிலாந்து பத்திரிகையாளருக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆண்ட்ரூ ஏற்கனவே தாய்லாந்து மன்னர் வஜிரலோங்க்கார்னை (Vajiralongkorn) பத்திரிகைகளில் விமர்சித்து வருபவர் . மன்னரின் காதலியான சினீநாட் குறித்த இந்த செய்தியை இங்கிலாந்து பத்திரிகையாளர் ஆண்ட்ரூ தனது முகநூல் பதிவில் பதிவிட்டுள்ளார்.

சிறைக்கு சென்ற சினீநாட், மீண்டும் மன்னருடன் இணைந்துவிட்டதால், அவரை பழிவாங்க இந்த படங்களை ராணி சுதிடா அனுப்பியிருக்கலாம் என கருதப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments