கடும் பனிப்பொழிவு, பண்டிகைக்காலத்தையொட்டி தாறுமாறாய் உயர்ந்த பூக்களின் விலை

கடும் பனிப் பொழிவு மற்றும் கிருஸ்மஸ் பண்டிகையையொட்டி பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
கடும் பனிப்பொழிவு மற்றும் கிருஸ்மஸ் பண்டிகையையொட்டி பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
மதுரை ஒருங்கிணைந்த மலர் வணிக வளாகத்தில் கடந்தவாரம் ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மல்லிகை பூ, தற்போது 3000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பிச்சி மற்றும் முல்லைப்பூ கிலோ ஒன்று தலா 800 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.
ஒரு கிலோ செவ்வந்தி பூ 150 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ, கிலோ ஒன்று 3200 ரூபாய் வரை விற்பனையாகிறது. கனகாம்பரம் 1500க்கு விற்பனையாகிறது.தை மாதம் வரை இந்த பூக்கள் விலை உயர்வு இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்
Comments