பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டங்களை நிறைவு செய்தார் நிதியமைச்சர்

பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டங்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிறைவு செய்தார்.
பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டங்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிறைவு செய்தார்.
2021-2022 பட்ஜெட் தயாரிப்புக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டங்கள் டிசம்பர் 14 முதல் 23 வரை காணொலி முறையில் நடைபெற்றன. தொழில், கல்வி, வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 170க்கு மேற்பட்ட பிரதிநிதிகள் 15 காணொலிக் கூட்டங்களில் கலந்து கொண்டு அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் இக்கூட்டங்களில் கலந்து கொண்டனர். பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்தது.
Comments