தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை-வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடுமென கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்த 4 நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவுவமென குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலத்தீவு, அதன் ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடலில் மணிக்கு 45 முதல் 55 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் அங்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments