பிரசாத் ஸ்டூடியோவுக்குள் சென்று தியானம் செய்யவும், உடைமைகளை எடுத்துச் செல்லவும் இளையராஜாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

0 3463
பிரசாத் ஸ்டூடியோவுக்குள் சென்று தியானம் செய்யவும், உடைமைகளை எடுத்துச் செல்லவும் இளையராஜாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

இசையமைப்பாளர் இளையராஜா, பிரசாத் ஸ்டூடியோவுக்குள் சென்று தியானம் செய்யவும், தனது உடைமைகளை எடுத்துச் செல்லவும் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பிரசாத் ஸ்டூடியோவில் இசைக்கோப்புப் பணிகளைச் செய்து வந்த இளையராஜாவை அங்கிருந்து வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து இசைக் கோப்புகள், இசைக் கருவிகள் உள்ளிட்ட உடைமைகளை எடுத்துக்கொள்ளவும், அறையில் தியானம் செய்யவும் அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடுத்தார்.

இழப்பீடு கோரிய வழக்கைத் திரும்பப் பெற வேண்டும், நிலத்தை உரிமை கோரக் கூடாது என்னும் நிபந்தனைகளுடன் இளையராஜாவை அனுமதிப்பதாகப் பிரசாத் ஸ்டூடியோ தெரிவித்தது.

இந்த நிபந்தனைகளை ஏற்பதாக இளையராஜா தெரிவித்ததை ஏற்ற நீதிபதி, ஒரு நாள் பிரசாத் ஸ்டூடியோவுக்குள் சென்று தியானம் செய்யவும், உடைமைகளை எடுத்துச் செல்லவும் இளையராஜாவுக்கு அனுமதி அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments