8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்று ஆற்றோரம் வீசிய உறவினர்

0 19545
நீலகிரி மாவட்டம் கொலக்கொம்பையைச் சேர்ந்த 8 வயது வட மாநில சிறுமி காணாமல் போன சம்பவத்தில் அவரது உறவினரே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்று ஆற்றோரம் வீசியிருக்கும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

அங்குள்ள கிரெய்க்மோர் (craigmore) தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வந்த ஜார்கண்ட் மாநில தம்பதியின் மகளை கடந்த 21ஆம் தேதி முதல் காணவில்லை என போலீசார் தேடி வருகின்றனர்.

விசாரணையின்போது சிறுமியின் உறவினர் ஒருவனை தீவிரமாக விசாரித்ததில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்று ஆற்றோரம் வீசினேன் என வாக்குமூலம் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. அந்த நபர் குறிப்பிட்ட இடத்தில் சிறுமியின் சடலம் இல்லாத நிலையில், தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments