குப்பை கொட்டக் கட்டணம் என்ற அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற உத்தரவிட வேண்டும்-முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

குப்பை கொட்டக் கட்டணம் என்ற அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார்.
குப்பை கொட்டக் கட்டணம் என்ற அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார்.
இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், சென்னை மாநகராட்சியில், திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம், ஜனவரி ஒன்றாம் தேதி சொத்து வரியுடன் சேர்த்து வசூலிக்கப்படும் என்ற அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த கட்டணம், சென்னை வாழ் குடும்பங்களிடமும், வணிகர்களிடமும், சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் புரிவோரிடமும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி நிலைகுலைய வைக்கும் என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
Comments