இந்திய ராணுவ தளபதி எம்எம் நரவானே ரெசின் லா உள்ளிட்ட முன்களப் பகுதிக்கு சென்று ஆய்வு

இந்திய ராணுவ தளபதி எம்எம் நரவானே ரெசின் லா உள்ளிட்ட முன்களப் பகுதிக்கு சென்று ஆய்வு
லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக சீனாவுடன் ஏற்பட்ட பிரச்சனை இன்னும் முடிவுக்கு வராத நிலையில், இந்திய ராணுவ தளபதி எம்எம் நரவானே ரெசின் லா உள்ளிட்ட முன்களப் பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
ஒரு நாள் பயணமாக லே பகுதிக்கு சென்ற நரவானே, கமாண்டர்கள் மட்டத்திலான அதிகாரிகளுடன் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் தற்போதுள்ள நிலைமை, பாதுகாப்பு நிலவரம், முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
முன்களப் பகுதி வீரர்களுடன் கலந்துரையாடிய ராணுவ தளபதி, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இனிப்புகள் மற்றும் கேக்குகளை அவர்களுக்கு வழங்கினார்.
Comments