இந்திய வருமான வரித்துறைக்கு எதிரான வழக்கில் கெயிர்ன் எனர்ஜி நிறுவனம் வெற்றி

0 1038
வருமான வரித்துறைக்கு எதிரான வழக்கில் கெயிர்ன் எனர்ஜி நிறுவனம் வெற்றி

கெயிர்ன்ஸ் எனர்ஜி நிறுவனத்துடனான வரித் தகராறில் 11 ஆயிரத்து 800 கோடி ரூபாயை இந்திய வருமான வரித்துறை திருப்பிச் செலுத்தப் பன்னாட்டுத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.

பிரிட்டனின் கெயிர்ன் நிறுவனத்துக்குச் சொந்தமான கெயிர்ன் இந்தியா நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை வாங்கிய வேதாந்தா நிறுவனம் அதற்கு கெயிர்ன் எனர்ஜி எனப் பெயரிட்டது.

இந்தப் பங்குகளை உரிமை மாற்றியதில் 24ஆயிரம் கோடி ரூபாய் மூலதன ஆதாயம் அடைந்ததாகக் கூறி அதற்குப் பத்தாயிரத்து 247 கோடி ரூபாய் வரியாகச் செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை தெரிவித்தது. 

இதை எதிர்த்துப் பன்னாட்டுத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் அளித்த தீர்ப்பில், வரியாகப் பெற்ற தொகையையும் அதற்கான வட்டியையும் கெயிர்ன் எனர்ஜி நிறுவனத்துக்குத் திருப்பிச் செலுத்த வருமான வரித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments