திரையில் பார்த்ததை தரையில் செய்த குறும்புக்கார குழந்தை ... விழுந்து நொறுங்கிய டிவி... வைரல் வீடியோ

0 9107

நடனமாடும் குஷியில் டிவியை போட்டு உடைத்த குழந்தையின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பொதுவாக நடனமாடுபவர்களுக்கு வயது வித்யாசம் தேவையில்லை. அப்படி, உற்சாக மிகுதியில் நடனமாடுபவர்கள் ஏராளம் இருக்கின்றனர். அமைதியாக இருப்பவர்கள் கூட குடித்துவிட்டால் மைக் ஜாக்சனை மிஞ்சும் அளவிற்கு நடனத்தில் கலக்குவார்கள். அப்படிப்பட்ட நடனங்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகியதை பார்த்திருப்போம். அனால் குழந்தைகளை பொறுத்தவரையில், நடனம் ஆடுவதற்கு காரணங்கள் தேவையில்லை. அப்படிப்பட்ட ஒரு குழந்தை ஆடிய நடனம் தான் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.

தமிழில் லக்ஷ்மி திரைப்படத்தில் வெளியாகி ஹிட் ஆன பாடல் மொராக்கா. இந்த பாடலை டிவியில் பார்த்தபடி சுட்டிக் குழந்தை ஒன்று நடனமாடுகிறது. அந்த பாடலில் ஆடுவதை போலவே நடனமாட முயற்சி செய்கிறது இந்த குழந்தை. இதனை, குழந்தையின் பெற்றோரும் பாடி ரசித்து வீடியோ எடுத்துக் கொண்டுள்ளனர்.

திடீரென ஓவராக உற்சாகம் அடைந்த குழந்தை, ஆடும் குஷியில் டிவியைப் பிடித்து ஆட முயன்றுள்ளது. ஆனால், ஆடிய வேகத்தில் டிவி எதிர்பாராத விதமாக கீழே விழுந்து உடைந்துவிட்டது. தற்போது இந்த வீடியோக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தனது நடனத்தின் மூலம் குழந்தை அனைவரையும் ரசிக்க வைத்தாலும், கூடவே டிவியை உடைத்து பெற்றோருக்கு செலவும் வைத்து விட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments