சட்டவிரோத தொலைத் தொடர்பு கம்பங்கள் - அகற்றிய மாநகராட்சி!

0 1902
சென்னையில் ரிலையன்சின் ஜியோ ஃபைபர் உள்ளிட்ட பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சட்டவிரோதமாக ஒரு லட்சம் கம்பங்களை நிறுவி, 55 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை ஏற்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, முதற் கட்டமாக 2000 க்கும் அதிகமான கம்பங்களை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி உள்ளனர்.

சென்னையில் ரிலையன்சின் ஜியோ ஃபைபர் உள்ளிட்ட பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சட்டவிரோதமாக ஒரு லட்சம் கம்பங்களை நிறுவி, 55 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை ஏற்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, முதற் கட்டமாக 2000 க்கும் அதிகமான கம்பங்களை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி உள்ளனர்.

மாநகராட்சி எல்லைக்குள், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அதிவேக இணையதள இணைப்பை வழங்குவதற்கான கம்பங்களை  நிறுவ தலா 5,500 ரூபாயும், கேபிள்களை பதிக்க கிலோ மீட்டருக்கு 56,100 நூறு ரூபாயும் சென்னை மாநகராட்சிக்கு கட்டணமாக செலுத்த வேண்டும்.

ஆனால் ரிலையன்சின் ஜியோ ஃபைபர் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள், இதர மாநிலங்களில் கம்பம்  ஒன்றுக்கு 3500 ரூபாய் மட்டுமே வசூலிப்பதாகவும், எனவே கட்டணத்தை குறைக்குமாறு விண்ணப்பித்தன. அந்த விண்ணப்பம் நிலுவையில் இருக்கும் போதே, இரவு நேரங்களில், அனுமதி கோராத மண்டலங்களையும் சேர்த்து சட்டவிரோதமாக சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கம்பங்களை  இந்த நிறுவனங்கள் நிறுவி விட்டன. 

அத்துடன் மாநகராட்சியிடம் தெரிவிக்கப்பட்ட இடங்களுக்குப் பதிலாக குடியிருப்புகள் அதிகம் உள்ள இடங்களில் இந்த கம்பங்கள் நாட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த வகையில் மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்திலும் 500முதல் 1500 கம்பங்கள்  நாட்டப்பட்டதும்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து சோழிங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களில் முதற்கட்டமாக 2000 கம்பங்களை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி உள்ளனர்.

சென்னை நகரில் விளம்பர பலகைகளை மாநகராட்சி முற்றிலுமாக அகற்றி உள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு நிறுவனமும் கம்பங்களை நிறுவத் தொடங்கினால் ஒரே இடத்தில் பத்துக்கும் மேற்பட்ட கம்பங்கள் நிறுவப்படும் நிலை உருவாகும். இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதோடு, விபத்துகளும் நிகழ வாய்ப்பு உருவாகி விடும்.

மேலும் கம்பங்கள் பெருகி,அவற்றில் கேபிள்களும் இணைக்கப்பட்டால், அவையும் போக்குவரத்திற்கு இடையூறை உருவாக்கும்,சிங்கார சென்னை சிங்காரத்தை இழக்கக் கூடும்.

இந்த நிலை வராமல் தடுக்க மாநகராட்சியே பைபர் இணைப்புகளை நிறுவி, அவற்றை தேவைப்படுவோருக்கு வழங்கினால் மாநகராட்சிக்கு வருவாய் பெருகும், வீணாக சாலைகள் தோண்டப்படுவதை தடுக்க முடியும், நகரமும் சிங்காரத்துடன் இருக்கும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments