அதிமுகவினர் அனைவரும் ஒரே அணியாக, வலுவாக இருக்கிறோம் - முதலமைச்சர்

கல்வி,நீர் மேலாண்மை, தொழில் ஆகியவற்றில் தமிழக அரசு புரட்சி படைத்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்ற ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமியின் இல்ல விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், அதிமுக என்றாலே எம்.ஜி.ஆர் ஜெயலலிதாதான் மனதில் தோன்றுகிறார்கள் என்றும் கட்சியினர் அனைவரும் ஒரே அணியாக இருப்பதால்தான் வலுவாக இருக்கிறோம் என்றும் கூறினார்.
Comments