மதுரையில் ரூ. 21 கோடி அளவுக்கு சரக்கு, சேவை வரி ஏய்ப்பு - தொழிலதிபர் கைது

0 1184

மதுரையில் 21 கோடி ரூபாய் அளவுக்கு சரக்கு மற்றும் சேவை வரி ஏய்ப்பு செய்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அழகப்பா நகரில் சமுத்திரா என்ற பெயரில் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருபவர் கனகரத்தினம். தனது நிறுவன தயாரிப்புகளை விற்பனை செய்த போது போலியான ரசீதுகளை சமர்ப்பித்து சரக்கு மற்றும் சேவை வரி கட்டாமல் 21 கோடி ரூபாய் வரை அவர் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு கனகரத்தினம் கைது செய்யப்பட்டார். மோசடி செய்த தொகையில் ஒரு கோடியே 77 லட்ச ரூபாயை அவர் திருப்பிச் செலுத்திவிட்டதாகக் கூறப்படும் நிலையில், மீதமுள்ள தொகையை செலுத்தினால் ஜாமீனில் விடுவிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments