இங்கிலாந்திலிருந்து சென்னை வந்த நபக்கு கொரோனா தொற்று உறுதி : சென்னை நபரோடு பயணித்த புதுச்சேரி நபருக்கும் கொரோனா பரிசோதனை

இங்கிலாந்திலிருந்து சென்னை வந்த நபக்கு கொரோனா தொற்று உறுதி : சென்னை நபரோடு பயணித்த புதுச்சேரி நபருக்கும் கொரோனா பரிசோதனை
இங்கிலாந்தில் இருந்து சென்னை வந்த பயணிக்கு கொரோனா இருந்தது கண்டறியப்பட்டதையடுத்து, அவருடன் பயணித்த புதுச்சேரி நபரும் கண்டறியப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து நாட்டில் புதிய வகை கொரோனா பரவி வரும் நிலையில், அங்கிருந்து சென்ன வந்த ஒரு நபருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அவருடன் விமானத்தில் பயணித்த புதுச்சேரியைச் சேர்ந்த நபரைக் கண்டறிந்த அம்மாநில சுகாதாரத்துறையினர், சோதனைக்காக அவருடைய சளி மாதிரிகளை எடுத்து புனேவிலுள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இன்று மாலைக்குள் பரிசோதனை முடிவுகள் தெரியவரும் என்று கூறப்படும் நிலையில், அவருடைய குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
Comments