உ.பி.யில் இப்கோ உரத் தொழிற்சாலையில் அம்மோனியா வாயுக் கசிவு... இருவர் உயிரிழப்பு

0 1490

உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் அருகே உள்ள இப்கோ உரத்தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிந்ததில் இருவர் உயிரிழந்தனர். 15பேர் மயக்கமடைந்தனர்.

பிரயாக்ராஜ் அருகே புல்பூரில் இந்திய உழவர் உரக் கூட்டுறவு நிறுவனத்தின் தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலையில் நேற்றிரவு பதினொன்றரை மணி அளவில் அம்மோனியா வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது.

இதையறிந்த இரவுப் பணித் தொழிலாளர்கள் பலர் விரைந்து வெளியேறினர். எனினும் உதவி மேலாளர், துணை மேலாளர் ஆகியோர் வாயுக் கசிவால் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

மயக்கமடைந்த தொழிலாளர்கள் 15 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து நேர்ந்த தொழிற்சாலையில் வாயுக் கசிவு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments