திருட வந்தவர் அளித்த சாட்சி : அபயா கொலை வழக்கில் பாதிரியார், கன்னியாஸ்திரிக்கு ஆயுள் தண்டனை

0 19556

கேரளாவில் கன்னியாஸ்திரி அபயா கொலை செய்த வழக்கில் பாதிரியார் தாமஸ், கன்னியாஸ்திரி செபி ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருவனந்தபுரம் சி.பி .ஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

கேரளா மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி அபயா அங்குள்ள பி.எம்.சி கல்லூரியில் படித்து வந்தார். தன் படிப்புக்காக செயின் பயஸ் கான்வென்ட்டில் தங்கியிருந்தார். கடந்த 1992-ம் ஆண்டு மார்ச் 27- ஆம் ஆண்டு இந்த கான்வென்ட் வளாகத்திலுள்ள கிணறு ஒன்றில் அபயா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அப்போது அபயாவுக்கு 19 வயதே ஆகியிருந்தது . முதலில் அபயா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. கோட்டயம் போலீஸார் வழக்கு பதிவு விசாரித்து வந்தனர்.

ஆனால், அபயா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மனித உரிமை ஆர்வலர் ஜோமோன் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சி.பி.ஐ. விசாரணையில், அபயாவை பாதிரியார்கள் தாமஸ் கோட்டூர், ஜோஸ் புத்ருக்கயில் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகியோர் கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.image

கன்னியாஸ்திரி அபயா 

பாதிரியார்களுக்கும் கன்னியாஸ்திரி செபியும் நெருக்கமாக இருந்ததை சமயலைறைக்கு தண்ணீர் குடிக்க சென்ற கன்னியாஸ்திரி அபயா நேரில் பார்த்து விட்டார். தங்களின் உறவு குறித்து அபயா வெளியே கூறி விடுவார் என்று பயந்து போன பாதிரியார்கள், கன்னியாஸ்திரி அபாயவை கான்வென்ட் வளாகத்தில் உள்ள கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளனர். 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இவர்கள் மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். தங்களை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க கேரள உயர்நீதிமன்றத்தை அணுக பாதிரியார் ஜோஸ் புத்ருக்கயில் மட்டும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டார். மற்ற இருவர் மீதும் வழக்கு நடைபெற்று வந்தது. கிட்டத்தட்ட 28 ஆண்டுகளாக இந்த வழக்கில் 177 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன. பல சாட்சியங்கள் பிறழ் சாட்சியங்களாக மாறினர்.image

அலக்கா ராஜூ

அபயாவின் ஆசிரியையான தெரசம்மா என்பவர் பல மிரட்டல்களை மீறி சி.பி.ஐ நீதிமன்றத்தில் சாட்சி அளித்தார். தெரசம்மா அளித்த சாட்சியத்தில் இரண்டு பாதிரியார்களும் பல கன்னியாஸ்திரிகளிடத்தில் தொடர்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்ததாக நீதிமன்றத்தில் கூறினார். அக்கம் பக்கத்தினர் அளித்த சாட்சியத்தில், இரண்டு பாதிரியார்களும் சுவர் ஏறி குதித்து கன்னியாஸ்திரிகள் வசிக்கும் பகுதிக்கு சென்றதை பார்த்துள்ளதாக தெரிவித்தனர். அதே போல இந்த வழக்கில் ஆலப்புழா அரசு மருத்துவமனையின் மகப்பேறு பிரிவு தலைவர் லலிதாம்பா மற்றும் டாக்டர் பிரேமா ஆகியோர் அளித்த கன்னியாஸ்திரி செபியின் கன்னித்தன்மை பரிசோதனை குறித்த சாட்சியும் முக்கியத்துவம் பெற்றது. தன்னை கன்னித்தன்மையுடன் இருப்பது போல காட்டிக் கொள்வதற்காக செபி அறுவை சிகிச்சை செய்திருந்ததை கண்டுபிடித்ததாக மருத்துவர்கள் கூறியிருந்தனர். அலக்கா ராஜூ என்ற திருடனும் கொலை நடந்த தினத்தின் போது, அதிகாலையில் அங்கே திருட சென்றுள்ளான். அலக்கா ராஜுவும் இந்த வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தான். தான் திருட சென்ற சமயத்தில் பாதிரியார்கள் மற்றும் ஒரு கன்னியாஸ்திரியுடன் அந்த வளாகத்துக்குள் சுற்றி வந்ததை பார்த்ததாக சி.பி.ஐ நீதிமன்றத்தில் சாட்சியளித்தான். இதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்றது.

இந்த வழக்கில்   சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சனில் குமார், பாதிரியார் தாமஸ் கோட்டூர் கன்னியாஸ்திரி செபி ஆகியோர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கினார்.  பாதிரியார் தாமசுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் கன்னியாஸ்திரி செபிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிரியார் தாமஸ் கோட்டூருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ. 6.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக வழக்கின் 2வது குற்றவாளியான கன்னியாஸ்திரி செபிக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. 

சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட காரணமாக இருந்த ஜோமோன் கூறுகையில், நான் 6 ஆம் வகுப்பு வரைதான் படித்துள்ளேன். இந்த வழக்கில் என்னால் போராட முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. திருட வந்த அடக்கா ராஜூவின் சாட்சியம் இந்த வழக்கில் மிக முக்கியமானதாக அமைந்துவிட்டது. அடக்கா ராஜூ உண்மையுடன் துணை நின்றார். அதே போல, நான் கேரள தலைமைச் செயலகத்தில் அபயாவின் பெற்றோருடன் தர்ணாவில் ஈடுபட்ட போது அவரின் சகோதரர் கூட இந்த வழக்கில் குற்றத்தை நிரூபித்து விட முடியாது என்றே சொன்னார். இப்போது, பலரும் அபயாவின் உறவினர்கள் என்று கூறி பேட்டி அளிக்கின்றனர். இந்த காட்சியை பார்க்கும் போது நான் மகிழ்ச்சியடைகிறேன். பல மிரட்டல்கள், தொல்லைகளை கடந்து வெற்றி கிடைத்துள்ளது . இந்த தீர்ப்பு நீதிமன்றத்தில் அரசியல் செல்வாக்கு, பொருளாதார செல்வாக்கு எடுபடாது என்பதை காட்டுகிறது என்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments