புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறப் போவதில்லை - மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்

0 1795

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற முடியாது என மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மீண்டும் தெரிவித்துள்ளார்.

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டெல்லியில் நவம்பர் 26 முதல் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசுடன் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பல சுற்றுப் பேச்சுக்கள் நடத்திய பின்னும் இதுவரை எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மிகப் பெரிய சீர்திருத்தத்தைக் கொண்டுவரும்போது முதலில் கேலி செய்வதும், பின்னர் எதிர்ப்பதும், இறுதியில் அதை ஏற்றுக்கொள்வதும் வழக்கம் எனத் தெரிவித்தார்.

இத்தகைய நடைமுறைதான் இப்போது நடந்துகொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments