சொத்து குவிப்பு வழக்கு : சுதாகரன் இன்று அபராதம் செலுத்த இருப்பதாகவும் நாளை அவர் விடுதலை செய்யபடலாம் என தகவல்

சொத்து குவிப்பு வழக்கு : சுதாகரன் இன்று அபராதம் செலுத்த இருப்பதாகவும் நாளை அவர் விடுதலை செய்யபடலாம் என தகவல்
சொத்து குவிப்பு வழக்கில் அபராதத்தை சுதாகரன் இன்று செலுத்த இருப்பதாகவும், நாளை அவர் விடுதலை செய்யபடலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
4 ஆண்டு சிறைத் தண்டனையும், 10 கோடியே 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் கர்நாடக மாநில பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே 92 நாள் சிறையிலிருந்ததை சுட்டிக்காட்டி, சுதாகரன் தாக்கல் செய்த மனுவை விசாரித்து, அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் இன்று அவர் அபராதம் செலுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Comments