80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபாலில் வாக்களிக்க வசதி... உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு

0 1006
80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபாலில் வாக்களிக்க வசதி... உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு

80 வயதுக்கு மேற்பட்டோருக்கும், மாற்று திறனாளிகளுக்கும் தபாலில் வாக்களிக்கும் வசதிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடுத்துள்ளது.

தேர்தலின் போது நாட்டின் பாதுகாப்பு படைகளில் உள்ளவர்கள், வெளிமாநில மற்றும் மாவட்டங்களில் பணியாற்றிவரும் காவல்துறை மற்றும் ஆயுதப்படையினர், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் ஆகியோர் வாக்களிப்பதை உறுதிசெய்யும் விதமாக தபால் ஓட்டுகள் பதிவு செய்யும் நடைமுறை தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் 80 வயதிற்கு அதிகமான முதியோர், மாற்று திறனாளிகளுக்கு தபாலில் வாக்களிக்க அனுமதி வழங்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும், அதனால் திட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் திமுக மனு அளித்திருந்தது. அதன்மீது தேர்தல் ஆணையம் உரிய முடிவெடுக்காததால் அக்கட்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

அந்த வழக்கு, நீதிபதிகள் சுப்பையா, சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இதே விவகாரம் தொடர்பான வழக்கு ஜனவரி 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், இந்த வழக்கையும் ஜனவரி 7க்கு ஒத்திவைக்க வேண்டும் என திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் கோரிக்கை வைத்தார். இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜனவரி 7ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments