பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி

0 4419

பொங்கல் திருநாளையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தப் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 பேருக்கு மிகாமல் கலந்துகொள்ளலாம் என்றும், எருதுவிடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்துகொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

திறந்த வெளியின் அளவுக்கேற்பச் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் அதிகப்பட்சம் 50 விழுக்காட்டுக்கு மிகாமல் பார்வையாளர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

வெப்பப் பரிசோதனை செய்த பிறகே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். மாடுபிடி வீரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனைக் கூடத்தில் கொரோனா தொற்று இல்லை எனச் சான்று பெற்றிருக்க வேண்டும்.

பார்வையாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments