விவசாயிகள் தினத்தையொட்டி முதலமைச்சர், துணை முதலமைச்சர் வாழ்த்து

0 1612

விவசாயிகள் தினத்தையொட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், உலகின் தலையாய தொழிலான உழவுத்தொழில் செய்துவரும் விவசாயப் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் தமது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உலகத்திற்கே படியளக்கும் உழவனாய் இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். துணை முதலமைச்சர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், விவசாயிகளின் நலன் பேணவும், உயர்விற்கு வழிகாணவும், வாழ்க்கைத் தரம் உயரவும் தமிழக அரசு என்றென்றும் உறுதுணையாக இருக்கும் என கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments