பாகிஸ்தானில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் பலி, 28 பேர் காயம்

0 1879

பாகிஸ்தானில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

நேற்று மாலை , கராச்சியில் உள்ள ஐஸ் தொழிற்சாலையின் பாய்லர் வெடித்துச் சிதறியதால், முழு கட்டிடமும் தரைமட்டமாகியது. 50 க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியதால், மீட்பு பணிகளில் ஏராளமான போலீசாரும், மீட்பு குழுவினரும் ஈடுபட்டனர்.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் இரவு வரை நீடித்தது. வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்ததாகவும், 28 பேர் காயமடைந்ததாகவும் கராச்சி மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments