குஜராத்தில் சிங்கம் தாக்கி 14 வயது சிறுமி உயிரிழப்பு

0 2965

குஜராத்தில் வனப்பகுதியில் நடந்து சென்ற 14 வயது சிறுமியை சிங்கம் கடித்துக் கொன்றது.

ஜூனாகத் மாவட்டத்தின் வந்தாலி என்ற இடத்தில் பண்ணையில் வேலை செய்த இரு சிறுமிகள் வனப்பகுதியைக் கடந்து சென்றனர். அப்போது, சிங்கம் ஒன்று அவர்களைத் தாக்கியது.

அவர்களில் ஒரு சிறுமி அருகில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் குதித்து உயிர் தப்பினார். ஆனால் பாவ்னா பரியா என்ற 14 வயது சிறுமியை சிங்கம் இழுத்துச் சென்றது.

தகவலறிந்த வனத்துறையினர் தேடிய போது சிறுமியின் சிதைந்த உடல் பாகங்கள் மீட்கப்பட்டன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments