இந்தியாவைத் தவிர்த்து மற்ற நாடுகளில் கொரோனா பரவும் வேகம் அதிகரிப்பு

0 4898

உலக அளவில் கொரோனா தொற்று இந்தியாவில் குறைந்து வரும் நிலையில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது.

நேற்று ஒரேநாளில் 5 லட்சத்து 94 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியானது. இதில் அமெரிக்காவில் மட்டும் ஒரு லட்சத்து 88 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளாகினர்.

இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் ஆயிரத்து 134 பேர் உள்பட கிட்டத்தட்ட 13 ஆயிரம் பேர் பெருந்தொற்றால் உயிரிழந்தனர்.

அமெரிக்காவைத் தொடர்ந்து பிரேசில், ஜெர்மனி, ஆகிய நாடுகளில் தலா ஆயிரம் பேரும் இங்கிலாந்து, இத்தாலி ஆகிய நாடுகளில் தலா 700 பேரும் உயிரிழந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments