அண்டார்டிகா கண்டத்தையும் விட்டுவைக்காத கொரோனா பாதிப்பு

0 2413
அண்டார்டிகா கண்டத்தையும் விட்டுவைக்காத கொரோனா பாதிப்பு

குளிர் பிரதேசமான அண்டார்டிகாவில் முதன்முறையாக 36 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கண்டத்தில் நிரந்தர குடியிருப்பாளர்கள் இல்லை என்றாலும், 1,000 ஆராய்ச்சியாளர்களும் பிற பணியாளர்களும் தங்கி ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இங்குள்ள 36 ஊழியர்களுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. அண்டார்டிகா பகுதியில் இருந்து திரும்பிய அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியானது.

அதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் சிலியில் உள்ள புன்டா அரினாஸ் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் அண்டார்டிக்கில் உள்ள அனைத்து முக்கிய ஆராய்ச்சி திட்டங்களும் நிறுத்தப்பட்டுள்ளதன் விளைவாக, உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி தடைபட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments