தமிழகம், புதுச்சேரியில் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த பரிசீலனை- தேர்தல் ஆணைய செயலர் உமேஷ் சின்ஹா

தமிழகம், புதுச்சேரியில் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த பரிசீலனை- தேர்தல் ஆணைய செயலர் உமேஷ் சின்ஹா
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தேர்தல் ஆணைய செயலர் உமேஷ் சின்ஹா தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்காளர்கள் பலர் விடுப்பட்டுள்ளதாக அரசியல் கட்சிகள் கூறியுள்ளதால் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடத்தப்படும் என்றார்.
தகுதியுள்ள அனைவரும் தங்களது பெயர்களை பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். பதற்றமான வாக்குச்சாவடிகள், ரவுடிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் உமேஷ்சின்ஹா கூறினார்.
Comments