இங்கிலாந்து கொரோனா வைரஸ் குறித்து பீதியடையவோ, கவலை கொள்ளவோ வேண்டாம்- மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண்

0 2091
இங்கிலாந்து கொரோனா வைரஸ் குறித்து பீதியடையவோ, கவலை கொள்ளவோ வேண்டாம்- மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண்

ங்கிலாந்து கொரோனா வைரஸ் குறித்து பீதியடையவோ, கவலை கொள்ளவோ வேண்டாம் என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 7 வாரங்களாக நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது என்றார். கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா பரவும் தன்மை அதிகரித்துள்ளது என்றும், அதே நேரத்தில் இதனால் நோயின் தீவிரமும், இறப்பு விகிதமும் அதிகரிக்கவில்லை என்று அவர் கூறினார்.

இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா இந்தியாவில் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments