சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும்; பொதுத் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்- மத்திய அரசு

சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும்; பொதுத் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்- மத்திய அரசு
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்புகளுக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும் தேர்வுகள் இன்றி மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது குறித்து ஆசிரியர்களுடன் காணொலி மூலம் கலந்துரையாடிய மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இதனை கூறினார். சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதங்களில் நடைபெறாது என்று அவர் குறிப்பிட்டார்.
தேர்வுகள் எப்போது நடத்துவது என்பது குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Comments