விண்வெளி ஆய்வில் சாதித்துள்ளதை போல ஆழ்கடல் ஆய்விலும் இந்தியா சாதனை படைக்கும்- பிரதமர் மோடி

விண்வெளி ஆய்வில் சாதித்துள்ளதை போல ஆழ்கடல் ஆய்விலும் இந்தியா சாதனை படைக்கும்- பிரதமர் மோடி
விண்வெளி ஆய்வில் சாதித்துள்ளதை போல ஆழ்கடல் ஆய்விலும் இந்தியா சாதனை படைக்குமென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சர்வதேச அறிவியல் விழாவில் காணொலி மூலம் பேசிய அவர் இதனை கூறினார். இந்திய விஞ்ஞானிகள் பல சாதனைகளை படைத்துள்ளதாக கூறிய அவர், சர்வதேச அளவிலான பிரச்சனைகளுக்கு இந்திய நிறுவனங்கள் தீர்வு கண்டு வருகின்றன என்றார்.
அறிவியல் ஆய்வுக்கு உகந்த நாடாக இந்தியாவை மாற்றுவதே அரசின் லட்சியமென அவர் கூறினார். அறிவியல் ஆய்வுகளை அதிகப்படுத்த அரசு உறுதி பூண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச அளவிற்கு திறன் வாய்ந்தவர்களாக நாட்டின் அறிவியல் ஆய்வாளர்களும் உயர தேவையான அனைத்து உதவிகளையும் அரசு மேற்கொள்ளும் என்றும் மோடி தெரிவித்தார்.
Comments